×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சைலண்டாக படப்பிடிப்பை முடித்த கார்த்தி.. அட இந்த படமா?

சைலண்டாக படப்பிடிப்பை முடித்த கார்த்தி.. அட இந்த படமா?

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. தற்போது இவர் 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். எந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

கிராமத்து கதை களத்தில் உருவாகும் இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் கும்பகோணத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்தப் படத்திற்காக நடிகர் கார்த்தி தனது கெட்டப்பை மாற்றியுள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த ஸ்வாதி தான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கார்த்தி சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்துக்கு 'மெய்யழகன்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Karthi #96 #ramkumar #kumbakonam
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story