×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பழம்பெரும் மூத்த நடிகர் திடீர் மரணம்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்! பிரபலங்கள் இரங்கல்!!

பழம்பெரும் மூத்த நடிகர் திடீர் மரணம்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்! பிரபலங்கள் இரங்கல்!!

Advertisement

கன்னட திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பழம்பெரும் மூத்த நடிகராக வலம் வந்தவர் லோஹிதாஸ்வா. துமகூரு தொண்டகரேவை சேர்ந்த இவர் அபிமன்யு, ஏகே 47, அவதார புருஷா, சின்னா, கஜேந்திரா, விஷ்வா, ஸ்நேகா லோகா, போலீஸ் லாக்கப், சுந்தர காண்டா, டைம் பாம் உள்ளிட்ட எக்கச்கக்கமான படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஏறக்குறைய 100 க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்து பெருமளவில் பிரபலமாகி லட்சக்கணக்கான ரசிகர்களை அவர் பெற்றுள்ளார். லோஹிதாஸ்வா ஆங்கில பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு கடந்த மாதம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் சாகர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் லோஹிதாஸ்வாவின் உடல் இறுதி அஞ்சலிக்காக குமாரசாமி லே அவுட்டில் உள்ள அவரது வீட்டில் இன்று காலையில் வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சொந்த கிராமத்தில் இறுதி சடங்கு நடைபெறுவதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் லோஹிதாஸ்வா மறைவிற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட பல பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Logitashwa #kannada actor #heart attack
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story