கண்மணி தொடரில் நடிக்கும் சௌந்தர்யா யார் தெரியுமா? அவரைப்பற்றிய சில சுவாரசிய தகவல்கள்.
Kanmani serial actress leesha details
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கண்மணி என்ற தொடரில் சௌந்தர்யா என்ற கதாபாரத்தில் கதாநாயகியாக நடித்துவருபவர் நடிகை லீஷா எக்லர்ஸ். ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் படித்து முடித்த இவர் மாடலிங் துறையை தேர்வு செய்துள்ளார்.
மாடலிங்கில் இருந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. ஆனால், சில காலங்கள் படத்தில் நடிக்க மறுத்த லீஷா எக்லர்ஸ் அதன்பின்னர் ஒருசில படங்களில் நடிக்க தொடங்கினார். பின்னர் 2016 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளிவந்த பலே வெள்ளைய தேவா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பொது நலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா, பிரியமுடன் பிரியா, மைடியர் லிசா, மடை திறந்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார். என்னது?கண்மணி சௌந்தர்யா இத்தனை படங்களில் நடித்துள்ளாரா? இப்படி இத்தனை படங்களில் நடித்தும் இவர் யார் என்பதுகூட வெளியே தெரியாமல் இருந்த நிலையில் கண்மணி என்ற ஒரே சீரியலில் மூலம் பிரபலமாகிவிட்டார் லீஷா (சௌந்தர்யா) .