×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

படப்பிடிப்பில் பரிதாபமாக பறிபோன மூன்று உயிர்கள்! வேதனையுடன் லைகாவிற்கு நடிகர் கமல் எழுதிய முக்கிய கடிதம்!

kamal writes letter to lica production

Advertisement

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்-2. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவந்தது, இந்த படப்பிடிப்பின்போது செட் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ராட்சச கிரேன் அறுந்து விழுந்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 படப்பிடிப்பில், கமல், இயக்குனர் சங்கர், நடிகை காஜல் அகர்வால் அனைவரும் இருந்துள்ளனர். அனைவரும் நூலிழையில் உயிர்தப்பியதாக கூறபடுகிறது. இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என கூறப்பட்ட கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடப்பட்டார். இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கியுள்ளார். மேலும் பட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சனும் இழப்பீடு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகை கமல் லைக்கா நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் படப்பிடிப்பில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் தயாரிப்பு நிறுவனம் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.  இதுபோன்ற விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 தொழிலாளர்களுக்கு பணம் மட்டும் போதாது அவர்களது பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்கள் படப்பிடிப்பு துவங்கும் முன்பே உறுதி செய்யப்பட்டால்தான் அவர்களால் நிம்மதியாக பணிபுரிய முடியும். மேலும் இதுபோன்ற விபத்து ஏற்பட்டால் இழப்பீடு முழுமையாக உடனடியாக தரப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamal #accident #lica production
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story