×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எனது அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம்.! கமல்ஹாசன் வைத்த சபதம்.! குஷியில் ரசிகர்கள்.!

எனது அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம் என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமாகிய கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமாகிய கமல்ஹாசன், தனது 66 வது பிறந்தநாளை  கடந்த 7 ஆம் தேதி  கொண்டாடினர். அதை தொடர்ந்து அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், ரசிகர்கள், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

அவரது பிறந்தநாள் தினத்தன்று கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இந்தநிலையில், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும், ட்விட்டர் பக்கத்தில்  நன்றி கூறியுள்ளார் கமல்ஹாசன். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்திய ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பிற துறை ஆளுமைகள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் பிறந்தநாளை 'நற்பணி' தினமாக கொண்டாடிய எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் சகோதரர்களை மனதாரத் தழுவிக்கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள 'உள்ளும் புறமும்' சீரமைப்பேன். அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம்" என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamal #mnm
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story