×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரஜினிகாந்தை கிண்டல் செய்த கமல்ஹாசன்..! காரணம் என்ன?

kamal-kidding-rajinikanth

Advertisement

ரஜினிகாந்தை கிண்டல் செய்த கமல்ஹாசன்..! காரணம் எனன்? 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கமல்ஹாசன் அவர்கள். இவர் தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். இவர் சமீபத்தில் அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் கடந்த மாதம் பிப்ரவரி 21, 2018 அன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல் தனது கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிமைவித்தார். அதே கூட்டத்தில் அவர் கட்சியின் கொடியையும் அறிவித்தார். அந்தக் கொடியில் ஆறு கைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பது 
 போலவும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருந்தது. கொடியின் நடுவில் கருப்பு வண்ணத்தைப் பின்புலமாகக் கொண்டு நடுவில் வெள்ளை நட்சத்திரம் இருக்கும். அதில் மக்கள் நீதி மய்யம் என எழுதியிருக்கும்.

இந்நிலையில் இவரது நண்பருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் கட்சி ஆரம்பிக்க போவதாக கூறியிருக்கிறார். ரஜினிகாந்த அவர்களின் ஆன்மீக அரசியல் பற்றி நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளார். 
ரஜினிகாந்தின் கட்சி கருவில் உள்ள குழந்தை போன்றது எனவும், தனது கட்சியோ தமிழக மக்களுடன் கரம் கோர்த்து நடக்கத் தொடங்கிவிட்டதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்... 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story