×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடடே சூப்பரு... ப்ராஜெக்ட் கே படத்தில் கமல் ஹாசன்... என்ன ரோல் தெரியுமா.?

அடடே சூப்பரு... ப்ராஜெக்ட் கே படத்தில் கமல் ஹாசன்... என்ன ரோல் தெரியுமா.?

Advertisement

தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் பிரபாஸ். பாகுபலி திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா ஹீரோவாக உருவெடுத்தார். தற்போது இவரது இந்த நடிப்பில்  ப்ராஜெக்ட் கே என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படத்தை நாக் அஸ்வின் என்பவர் இயக்குகிறார். இந்தத் திரைபடமும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படத்திலிருந்து தமிழ் ரசிகர்களுக்கு  ஆச்சரியமூட்டும் வகையில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

அந்த செய்தியின் படி உலக நாயகன் கமல்ஹாசன் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். மேலும் அவருக்கு சம்பளமாக ரூபாய் 150 கோடி வழங்க இருப்பதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

கமல்ஹாசன் 20 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம். இந்த செய்தி வெளியானதில் இருந்து தமிழ் திரை உலக ரசிகர்கள் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். உலக நாயகனை வில்லனாக பார்ப்பதற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு இப்போதே தொடங்கி விட்டது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#project k #movie #Kamal Hassan #Villain #Update
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story