×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"ஏன் வில்லனாக நடிக்கிறேன்.?" என்பதற்கு கமல்ஹாசன் அளித்த தெளிவான விளக்கம்.!

ஏன் வில்லனாக நடிக்கிறேன் என்பதற்கு கமல்ஹாசன் அளித்த தெளிவான விளக்கம்.!

Advertisement

இயக்குனர் நாகாஸ்வினி இயக்கத்தில்  ப்ராஜெக்ட் கே என்று பெயரிடப்பட்ட திரைப்படத்திற்கு தற்போது கல்கி 2898 ஏடி என பேரிடப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க அவருடன் உலக நாயகன் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பத்தாணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். இந்தத் திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும்  உருவாக இருக்கும் இந்த திரைப்படம்  பான் இந்தியா சினிமாவாக  உருவாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கான பெயர் அறிவிப்பு விழா மற்றும்  நடிகர் நடிகைகள் அறிமுக நிகழ்ச்சி  அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தான் படத்திற்கான பெயர் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன் தான் ஏன் வில்லனாக நடிக்கிறேன் என்பது குறித்து பேசி இருக்கிறார். இது பற்றி குறிப்பிட்டுள்ள அவர் ஒரு வில்லன் சிறப்பாக இருந்தால்தான் அவனை வென்று கதாநாயகன் சிறப்பானவனாக வெற்றி பெற முடியும். அதனால் எந்த ஒரு திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரம் என்பது மிகவும் முக்கியம் என தெரிவித்திருக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Pan India #Kamal Hassan #Prabhas #Villain
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story