×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது.. விக்ரம் படத்தில் நடிகர் கமல் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா! வெளிவந்த வியப்பூட்டும் தகவல்!!

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர்ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து உலக நாயகனாக வலம்வருபவர்

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர்ஹிட், மாஸ் திரைப்படங்களில் நடித்து உலக நாயகனாக வலம்வருபவர் நடிகர் கமல். அவர் அடுத்ததாக மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி பிரபலமடைந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இது அவரது 232வது படமாகும்.  இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன்
உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளது.  சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் கண்பார்வையற்றவராக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கமல் இதற்கு முன் ஏற்கனவே ராஜபார்வை என்ற படத்தில் கண் பார்வையற்றவராக நடித்திருந்தார். தற்போது 30 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamal #blind #vikram
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story