×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விக்ரம் பட உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு கமல் கொடுத்த பரிசு! என்னனு பார்த்தீங்களா!!

விக்ரம் பட உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு கமல் கொடுத்த பரிசு! என்னனு பார்த்தீங்களா!!

Advertisement

உலகநாயகன் கமல் நடிப்பில் உருவான திரைப்படம் விக்ரம். இப்படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் மற்றும் சூர்யா ஆகியோர் மிரட்டலாக நடித்துள்ளனர்.

கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் கடந்த ஜூன் 3ம் தேதி வெளியாகி தாறுமாறாக வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. படம் வெளியான நான்கு நாட்களிலேயே உலகம் முழுவதும் 200 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் விக்ரம் படத்தின் நடிகரும், தயாரிப்பாளருமான கமல் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு விலையுயர்ந்த லெக்சஸ் சொகுசு காரை பரிசளித்துள்ளார். அதனைப் போன்றே அவர் விக்ரமில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ரக பைக்கை பரிசாக அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் கமலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamal #gift #bike
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story