×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விக்ரம்; படத்தின் ப்ரமோஷன்களுக்கு தான் மட்டும் சென்றது ஏன்? நடிகர் கமல் கூறிய பதிலை பார்த்தீங்களா!!

விக்ரம்; படத்தின் ப்ரமோஷன்களுக்கு தான் மட்டும் சென்றது ஏன்? நடிகர் கமல் கூறிய பதிலை பார்த்தீங்களா!!

Advertisement

கமல் நடிப்பில் வெளிவந்து தற்போது வசூலை வாரி இறைத்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம் என பல முன்னணி பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மாஸ் காட்டி வருகிறது.

இந்த நிலையில் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இன்று சக்சஸ் மீட் வைக்கப்பட்டது. இதில் நடிகர் கமலும் இயக்குனரும் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளனர். அப்பொழுது நடிகர் கமலிடம், பிரமோஷன்களுக்கு தனியாக சென்றது ஏன்? என கேள்வியெழுப்பப்பட்டது. 

அதற்கு அவர், தான் எந்த காரணத்திற்காகவும் அவ்வாறு செல்லவில்லை, தங்களுடைய படக்குழு ஒவ்வொரு வேலையாக பிரித்துக் கொண்டதாக கூறியுள்ளார். மேலும் தான் பிரமோஷன்களுக்காக சென்றபோது படக்குழுவினர் படத்தின் சென்சார் போன்ற மற்ற பணிகளை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vikram #Promotion #kamal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story