×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக்பாஸ் தர்ஷனுக்கா இப்படியொரு வாய்ப்பு? கமல் வெளியிட்ட பிரம்மாண்ட அறிவிப்பு! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

Kamal announced about his 50 movie

Advertisement

தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சதிரமாக நடித்ததன் மூலம் அறிமுகமானார் கமல் ஹாசன். அதனை தொடர்ந்து அவர் இதுவரையில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர்  தற்போது உலக நாயகனாக ஜொலித்து வருகிறார்.மேலும் தற்போது அவரது திரைப்பயணம் 60 ஆண்டுகளை எட்டியுள்ளது. 
 
சிறந்த நடிகராக மட்டுமின்றி கமல் சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக தொகுத்து வழங்கிவந்தார். மேலும் பல படங்களை தயாரித்தும் வருகிறார். மேலும் கமல் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்2 என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த 7ம் தேதி  நடிகர் கமல்ஹாசனின் 65 -வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இதனை தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் அதனை தொடர்ந்து அன்று கமலின் சொந்த ஊரான பரமகுடியில் அவரது தந்தை சீனிவாசன் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனை தொடர்ந்து நேற்று ராஜ்கமல் பிலிம்ஸ் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் கமல் ராஜ்கமல் பிலிம்ஸின் 50வது படம் குறித்து பேசினார். அதில், இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்.மேலும் அந்த  படத்தில் நான்  நடிக்கவில்லை என்றும் ஒரு  புதிய முகம் நடிப்பார் என்பது போன்று பேசியிருந்தார்.இந்நிலையில் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் கமல்,  ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கவைப்பேன் என வாக்களிந்திருந்தார். இந்நிலையில் கமல் இவ்வாறு கூறியதும் தர்ஷன்தான் நடிக்கவுள்ளார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kama #Tharshan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story