×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. யார்னு பார்த்தீங்களா! விக்ரம் படத்தில் கமலுக்கு மகனாகும் பிரபல முன்னணி நடிகரின் வாரிசு! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ

Advertisement

தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், உலகநாயகன் கமல் ஹீரோவாக நடிக்கிறார். இது அவரது 232வது படமாகும்.  இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது.

 விக்ரம் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயராமின் மகன் காளிதாஸ் விக்ரம் படத்தில் நடிகர் கமலுக்கு மகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamal #Kalidass #vikram
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story