×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பீச் பேபியான காஜல் மகன்! கோவாவில் குடும்பத்துடன் செம குதூகலம்தான்! வைரலாகும் வீடியோ!!

பீச் பேபியான காஜல் மகன்! கோவாவில் குடும்பத்துடன் செம குதூகலம்தான்! வைரலாகும் வீடியோ!!

Advertisement

பரத் நடிப்பில் வெளிவந்த பழனி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி பின்  விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல டாப் நட்சத்திரங்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் காஜல் சில படங்களில் நடித்து வந்தார். பின் அவர் கர்ப்பமானதை தொடர்ந்து ஒப்பந்தமான படங்களில் இருந்து விலகினார். இந்தநிலையில் அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அவர்கள் நெய்ல் கிச்சுலு என பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில் காஜல் அகர்வால் தற்போது தனது குடும்பத்தினருடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தனது மகன் முதல்முதலில் கடற்கரையில் கால்பதித்த புகைப்படங்கள் மற்றும் கணவருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kajal #goa #family
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story