×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அம்மாவாக ட்ரையினிங்! கண்ணுப்பட வைக்கும் கொள்ளை அழகில் காஜல்! தெறிக்கவிடும் கியூட் புகைப்படங்கள்!!

அம்மாவாக ட்ரையினிங்! கண்ணுப்பட வைக்கும் கொள்ளை அழகில் காஜல் வெளியிட்ட கியூட் புகைப்படங்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் பல உச்ச பிரபலங்களுடன் இணைந்து எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து முன்னணி டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

அதனைத் தொடர்ந்தும் காஜல் படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். ஆனால் கர்ப்பமான நிலையில் அவர் படங்களிலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் காஜல் அவ்வப்போது தனது கர்ப்ப கால சுவாரசியங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு அண்மையில் எளிமையாக சீமந்த விழா நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதில் கண்ணைக் கவரும் சிவப்பு புடவையில் இருக்கும் அழகிய புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது. மேலும் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kajal #Pregnancy #Viral
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story