×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒருவேளை அது உண்மைதானோ! நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படத்தை கண்டு குழம்பிய ரசிகர்கள்!! என்ன விஷயம் தெரியுமா??

ஒருவேளை அது உண்மைதானோ! நடிகை காஜல் புகைப்படத்தை கண்டு குழம்பிய ரசிகர்கள்!! என்ன விஷயம் தெரியுமா??

Advertisement

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த பழனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனைத் தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார். நடிகை காஜல் அகர்வால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தொழிலதிபர் கௌதம் கிட்சிலு என்பவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் காஜல் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் சமீபத்தில் காஜல் அவற்றிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில் கர்ப்பமாக இருப்பதாலே அவர் படங்களில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இதுகுறித்து அவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட நெட்டிசன்கள், அதில் காஜலின் வயிறு லேசாக பெரிதாக இருக்கிறது. காஜல் கர்ப்பமாக இருப்பது உண்மைதானோ என கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kajal #latest photo #pregnant
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story