×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆட்டோவில் தூங்கிய காதல் பட நடிகர் பாபு திடீர் மரணம்! வெளியான அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமாவில் நடிகர் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெர

Advertisement

தமிழ் சினிமாவில் நடிகர் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டாகி வசூல் சாதனை படைத்த திரைப்படம் காதல். கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ளார். இப்படத்தில் விருச்சிககாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் பாபு.

இப்படத்தைத் தொடர்ந்து அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மன உளைச்சல் அடைந்த அவர் தொடர்ந்து உணவு, தங்க இருப்பிடம் இல்லாமல் பெருமளவில் கஷ்டப்பட்டு வந்தார். 

இந்நிலையில் அவர் வறுமையில் கஷ்டப்பட்டுவது குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அதனை அறிந்த பலரும் அவருக்கு உதவி செய்ய முன்வந்தனர். இந்த நிலையில் தற்போது நடிகர் காதல் பாபு  உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த ஆட்டோவில் படுத்திருந்த அவர் திடீர் மரணம் அடைந்துள்ளார். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kadhal #Babu #dead
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story