×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காலையில் வாக்கிங் சென்றுவிட்டு... வீட்டுக்கு வந்து நெஞ்சுவலிக்குதுன்னு சொன்னவர் தான்.! பாக்யராஜின் கடைசி தருணங்கள்.!!!

திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் 73 வயதில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement

தமிழ் சினிமாவின் பாக்யராஜ் எனும் பெயரே தனித்துவமான திரைக்கதைக்கு அடையாளமாக இருந்தது. 'திரைக்கதை மன்னன்' என்று ரசிகர்களால் போற்றப்பட்ட மூத்த இயக்குநரும் நடிகருமான அவர், இன்று காலை 73 வயதில் காலமானார். அவரது மறைவு செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாக்கிங் முடிந்து வீடு திரும்பியபின் திடீர் உடல்நலக் குறைவு

கோவாவில் நடிகை குஷ்புவின் மகள் திருமண விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சென்னை திரும்பியிருந்த பாக்யராஜ், இன்று காலை வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்ததும் நெஞ்சு வலி இருப்பதாகக் கூறியதால், குடும்பத்தினர் உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: # BREAKING : அதிர்ச்சி... பிரபல நடிகர் பாக்யராஜ் மாரடைப்பால் திடீர் மரணம்....! பெரும் சோகத்தில் திரையுலகினர்.!!!

கோவாவில் இரண்டு நாட்களுக்கு முன்புவரை தங்களுடன் உற்சாகமாகப் பேசி சிரித்தவர் இவ்வளவு விரைவாக பிரிந்துவிடுவார் என்று யாரும் நினைக்கவில்லை என நடிகை சுஹாசினி மணிரத்னம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

திரைக்கதையால் தனி முத்திரை பதித்த கலைஞர்

1953ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்த பாக்யராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். '16 வயதினிலே' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான அவர், 1979ஆம் ஆண்டு வெளியான 'புதிய வார்ப்புகள்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை நகைச்சுவையும் உணர்வுகளும் கலந்த திரைக்கதைகளாக மாற்றிய அவரது பாணி, தமிழ் சினிமாவில் தனி இடத்தைப் பெற்றது.

பிரபலங்கள் நேரில் அஞ்சலி

அவரது மறைவு செய்தியை அறிந்ததும் திரையுலகினர் பலரும் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, அவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றி பின்னர் இயக்குநர்களாகவும் நடிகர்களாகவும் உயர்ந்த பார்த்திபன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் தங்களது குருநாதருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். மேலும், மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: ஒன்னும் இல்ல உங்களுக்கு... வீட்டுக்கு நல்லபடியா வருவீங்கன்னு நினைச்சேனே... இப்படி மூச்சு பேச்சின்றி வந்து இருக்கீங்களே! துடிதுடித்து அழுது உடைந்த பூர்ணிமா.. திரையுலகமே கண்ணீர்.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#K Bhagyaraj #பாக்யராஜ் #tamil cinema #சுஹாசினி #MK Stalin
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story