பதவியை ராஜினாமா செய்த பாக்யராஜ் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
K Backiyaraj resigned his posting because of sarkar story theft

தற்போதைய தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்படுவது சர்க்கார் படம் பற்றித்தான். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகுகிறது சர்க்கார் திரைப்படம்.
இந்நிலையில் சர்க்கார் படத்தின் கதை திருட்டுக்கதை என்றும் தனக்கு நியாயம் வேண்டும் என்றும் உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அந்த் புகாரை எழுத்தாளர் சங்க தலைவராக இருக்கும் நடிகர் பாக்யராஜ் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த பாக்யராஜ் இரண்டு கதைகளும் ஒன்றுபோல் உள்ளது என்று பேட்டி அளித்தார். பின்னர் விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது. இந்தநிலையில் உதவி இயக்குனருடன் சாமரம் ஏற்பட்டதால் அணைத்து விவகாரங்களும் சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நடிகர் பாக்யராஜ். மேலும் தனது ராஜினாமா குறித்து அவர் விளக்கமளித்து ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் பாக்யராஜின் ராஜினாமாவை எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஏற்று கொள்ளவில்லை என்றும் அவரே தலைவராக தொடர வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் தகவல்கள் வந்தன.
இதனையடுத்து திடீர் திருப்பமாக எழுத்தாளர் சங்கத்தலைவராக கே.பாக்யராஜ் அவர்களே தொடர்வார் என்று எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. சங்க உறுப்பினர்களின் வேண்டுகோளை பாக்யராஜ் ஏற்று, ராஜினாமாவை வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.