×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

71 வயது நடிகருடன் ஜோடி சேரும் நடிகை ஜோதிகா.! அடஅட.. தலைப்பே வேற லெவலில் இருக்கே.! வைரலாகும் போஸ்டர்!!

71 வயது நடிகருடன் ஜோடி சேரும் நடிகை ஜோதிகா.! அடஅட.. தலைப்பே வேற லெவலில் இருக்கே.! வைரலாகும் போஸ்டர்!!

Advertisement

தமிழ் சினிமாவில், பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஜோதிகா. இவர் நடிகர் சூர்யாவை காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தியா என்ற மகளும் மற்றும் தேவ் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சில காலங்கள் சினிமாவிலிருந்து விலகி இருந்த நடிகை ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அவர் ஹீரோயின்களுக்கு, கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளிவந்த பொன்மகள் வந்தாள், ராட்சசி, உடன்பிறப்பே போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகை ஜோதிகா பல வருடங்கள் கழித்து மீண்டும் மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கிறார். அவர் 71 வயது நடிகரான மம்முட்டியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது அழகிய போஸ்டருடன் அப்படத்தின் டைட்டில் வெளிவந்துள்ளது. அதாவது படத்திற்கு காதல் - The Core என தலைப்பை வைத்துள்ளனர். இந்த படத்தை ஜியோ பேபி என்பவர் இயக்கவுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jothika #Mammootthy #Malaiyalam
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story