×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செம ஸ்டைலாக, பட்டையை கிளப்பி வெளிவந்த ஜோதிகாவின் புதிய பர்ஸ்ட் லுக் போஸ்டர்! மாஸான படத்தலைப்பு இதுதான்!!

jothika jackpot movie firstlook poster released

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன், பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் ஜோதிகா. அவர் பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்குப் பிறகு அவர் சினிமாவை விட்டு விலகி தனது குடும்பத்தினரை கவனித்து வந்தார்.

இதனை தொடர்ந்து ஜோதிகா 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். அதனை தொடர்ந்து காற்றின் மொழி நாச்சியார் என பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில்  ஜோதிகா தற்பொழுது ஜாக்பாட் என்ற திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார். 

மேலும் இப்படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி,யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களிலேயே முடிவடைந்துள்ளது. அதனைத்தொடர்ந்து தற்பொழுது படம் வெளியிடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் படக்குழு இன்று ஜாக்பாட் என்ற தலைப்புடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jothika #jackpot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story