×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பல வருஷங்களுக்கு பிறகு ஜித்தன் ரமேஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! வெளிவந்த சூப்பரான தகவல்!!

தமிழ் சினிமாவில் ஜித்தன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ரமேஷ். இப்படத்தி

Advertisement

தமிழ் சினிமாவில் ஜித்தன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ரமேஷ். இப்படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அவர் ஜித்தன் ரமேஷ் என அழைக்கப்பட்டார். பின்னர் ஜித்தன் ரமேஷ் 10ற்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அவை எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. 

இந்நிலையில் ஜித்தன் ரமேஷ் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சம்யுக்தாவுடன் ஜோடியாக இணைந்து போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இந்தநிலையில் ஜித்தன் ரமேஷ் மீண்டும் தற்போது புதிய படத்தில் ஹீரோவாக களமிறங்கவுள்ளார். அப்படத்தை சோழநாட்டான் இயக்குனர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு மன்னார் வளைகுடா என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை ஜித்தன் ரமேஷின் Must Watch நிறுவனம்  தயாரிக்கிறது. இந்த தகவல் வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jitthan ramesh #new movie
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story