×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அஜித் வழியில் இணைந்த ஜெயம் ரவி! சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் 'சைரன் படத்தில்'!

அஜித் வழியில் இணைந்த ஜெயம் ரவி! சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் 'சைரன் படத்தில்'!

Advertisement

தமிழ் சினிமாவில் 'சாக்லேட்' பாயாக அறிமுகமாகி 'ரகட்' பாயாக மாறியவர் ஜெயம் ரவி. சமீபத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக நிறைய பட வாய்ப்புகளை நிராகரித்திருந்தார் ஜெயம் ரவி. அதற்கேற்றார் போல் பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. அந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் அகிலன் என்ற திரைப்படம் நீண்ட நாட்களாக நடைபெற்ற சிக்கல்கள் தீர்ந்து மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அகிலன் படத்தை தொடர்ந்து தனது அண்ணன் இயக்குனர் ராஜா  இயக்கவிருக்கும் தனி ஒருவன் 2 படத்தில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி.

மேலும் இவர் நடிப்பில் உருவாகி வரும்  இறைவன் திரைப்படம் மே மாதம் திரைக்கு வர இருக்கிறது. ஜெயம் ரவியின் திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அவரது புதிய படம் ஒன்றிற்காக வேதாளம் அஜித் கெட்டப்பில் இருக்கிறார் ஜெயம் ரவி. 'சைரன்' என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வரும் அவர் இந்தப் படத்திற்காக அஜித்தை போல் 'சால்ட் அண்ட் பேப்பர்' லுக்கில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்விற்கு வந்திருந்தார். அந்த லுக் ரசிகர்களையும் சினிமா உலகினரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. சாக்லேட் பாயாகவும் 'ரகட்' பாயாகவும் இருந்த ஜெயம் ரவியை வித்தியாசமான ஒரு லுக்கில் பார்த்த வியப்பில் இருக்கின்றது தமிழ் திரை உலகம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Jayam ravi #Sairen #Agilan #actor #movie
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story