தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் ஜீவாவுக்கு இப்படியொரு அட்டகாசமான ஆசையா? ஓபன் டாக்கால் உற்சாகத்தில் ரசிகர்கள்!!

jeeva wish to act with ajith

jeeva-wish-to-act-with-ajith Advertisement

தமிழில் காளிஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கீ. இப்படத்தில் ஆர்ஜே பாலாஜி, அனைகா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூர்யா தமிழில் வில்லனாக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் கீ படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜீவா கூறுகையில், கீ படம்  இளைஞர்களிடமும் பெண்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய படமாக இருக்கும். ஸ்மார்ட்போன்களால் ஏற்படும் ஆபத்துகள், அதைக் கொண்டு நம்முடைய தகவல்களை எப்படி திருடுகிறார்கள் என்பதை  சொல்லும் படமாக இருக்கும். 

Jeeva

இந்தப் படத்தில், ஆர்.ஜே.பாலாஜி நடித்திருக்கிறார். மிகச்சிறந்த நடிப்பையும் காமெடியையும் வழங்கியிருக்கிறார். ஆனாலும் கூட இப்போது வரை சந்தானத்தை ரொம்பவே மிஸ் செய்கிறேன். கடந்த ஆண்டே வெளியாக வேண்டியது. பல்வேறு காரணங்களால் படம் தள்ளிப்போனது. என கூறியுள்ளார்.

மேலும் சில முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் தல அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பதே எனது ஆசை. அப்படியொரு கதை அமையவேண்டும் என்று காத்திருக்கிறேன் என்று ஜீவா கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Jeeva #Ajith Kumar #key movie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story