×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எதிர்பாராத சர்ப்ரைஸ்! பிக்பாஸ் மேடைக்கு வந்த பிரபல முன்னணி நடிகர்! செம குஷியில் போட்டியாளர்கள்!

நடிகர் ஜெயம் ரவி இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 , 11 நாட்களை கடந்து நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா,சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா ஆகிய  8 பேர் வெளியேறியுள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் நிகழ்ச்சி முடிவடையவுள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த வாரத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆரி, ரியோ, சோம் ஆகிய 3 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு கேப்டன் பதவிக்கான போட்டியில் பங்கேற்றனர் .இந்த டாஸ்கில் வெற்றிபெற்று ஆரி கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மேலும் அடுத்த வாரம் நாமினேஷனலிருந்து தப்ப்பித்தார். இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆரி, ஆஜித், சிவானி, கேப்ரில்லா, அனிதா, சம்பத் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த வாரம் அனிதா சம்பத் அல்லது ஆஜித் ஆகிய இருவரில் யாராவது வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை கூட்டும் வகையில் இன்று பிக்பாஸ் மேடைக்கு ஜெயம் ரவி வந்து போட்டியாளர்களிடம் பேசுகிறார்.ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ள நிலையில் அதன் ப்ரோமோஷனுக்காக ஜெயம் ரவி வந்துள்ளார். இந்த ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #Jayam ravi
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story