×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

'உனக்கு வயதே ஆகாதா' ஜெயம் ரவியை பார்த்து வியந்த பிரபல தமிழ் நடிகை; யார் தெரியுமா?

jayam ravi - komali poster - actress jenilea comment

Advertisement

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. இப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். மேலும் தொடர்ந்து  பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த ஜெயம் ரவி தற்போது தனது 24 வது படமாக பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் உருவாகும் கோமாளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார் இதற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.



 

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் மையமாகக் கொண்டு காமெடியாக உருவாக்கப்படும் இப்படத்தில் ஜெயம் ரவி ஒன்பது வேடங்களில் நடிக்கிறார். சமீபத்தில் கோமாளி படத்தின் போஸ்டர்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.  அதில் இறுதிப் போஸ்டரில் ஜெயம்ரவி ஸ்கூல் பையன் போல இருக்கும் போஸ்டர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருந்தது.



 

இந்நிலையில், சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து நடித்திருந்த ஜெனிலியா தற்போது கோமாளி பட பள்ளி மாணவனாக ஜெயம் ரவி இருக்கும் போஸ்டரைப் பார்த்து, என்ன ஜெயம்ரவி இது. உனக்கு வயதே ஆகாதா... உன்னைப் பார்க்க பதின்ம வயது பையனைப் போலவே இருக்கு. என்று கூறி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#komali #Jayam ravi #jenilia
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story