×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒன்றரை வருட காதல்..! அப்புறம் பிரேக்கப் ஆச்சு... அந்த டைம்ல எனக்கு ஆறுதலே அதுதான்! மனம் திறந்து பேசிய ஜேசன் சஞ்சய் !!!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது கல்லூரி கால காதல் மற்றும் பிரேக்கப் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். யுவன் பாடல்கள் தந்த ஆறுதலையும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், நடிகராக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குநராக திரையுலகில் களமிறங்கியுள்ளார். சந்தீப் கிஷன் நடிப்பில் அவர் இயக்கிய ‘சிக்மா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. படத்தின் மேக்கிங்கிற்கு பாராட்டுகள் கிடைத்தாலும், திரைக்கதை தொடர்பாக கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

கல்லூரி காதல் குறித்து சஞ்சய் ஓபன் டாக்

‘சிக்மா’ படத்தின் விளம்பரப் பணிகளுக்காக அளித்த பேட்டி ஒன்றில் ஜேசன் சஞ்சய் தனது கல்லூரி கால காதல் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். கல்லூரியில் படித்தபோது ஒருவரை காதலித்ததாகவும், அந்த உறவு சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மகனின் முதல் படத்தை பார்க்க தியேட்டருக்கு ஓடோடி வந்த சங்கீதா! கூட அவரது தங்கையும்... இணையத்தில் தீயாய் வைரலாகும் வீடியோ..!!!

பிரேக்கப் காலத்தில் யுவன் பாடல்கள்

பின்னர் இருவரும் பேசி சுமூகமாக பிரிந்துவிட்டதாக கூறிய சஞ்சய், பிரேக்கப் காலத்தில் யுவன் சங்கர் ராஜாவின் காதல் மற்றும் சோகப் பாடல்களை தொடர்ந்து கேட்டதாக தெரிவித்துள்ளார். அந்த பாடல்கள் அப்போது தனக்கு ஆறுதலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரல்

பிரேக்கப்பில் இருந்து மீண்டு, அதன் பிறகு வாழ்க்கையை நோக்கி நகரத் தொடங்கியதாகவும் ஜேசன் சஞ்சய் கூறியுள்ளார். தனது தனிப்பட்ட அனுபவத்தை அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ள இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

இயக்குநராக தனது முதல் படத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஜேசன் சஞ்சயின் இந்த பேட்டி, அவரது திரைப்பயணத்துடன் சேர்த்து தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

 

இதையும் படிங்க: அம்மா வாரத்திருக்கு ஒரு முறை! ஆனால் அப்பாவுக்கு வந்துச்சு அவ்ளோதான்.... தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் சொன்ன சுவாரஸ்யமான தகவல்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஜேசன் சஞ்சய் #Jason Sanjay #சிக்மா திரைப்படம் #யுவன் சங்கர் ராஜா #கல்லூரி காதல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story