×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நான் உங்களை தேடிக்கொண்டிருக்கிறேன்.! வேதனையுடன் நடிகை ஸ்ரீதேவியின் மகள் வெளியிட்ட உருக்கமான பதிவு.!

நான் உங்களை தேடிக்கொண்டிருக்கிறேன்.! வேதனையுடன் நடிகை ஸ்ரீ தேவியின் மகள் வெளியிட்ட உருக்கமான பதிவு.!

Advertisement

இந்திய திரையுலகில் முன்னனி நடிகையாக, ரசிகர்களின் கனவு நாயகியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இந்நிலையில் நடிகை ஸ்ரீ தேவி பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை ஸ்ரீ தேவி 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி உயிரிழந்தார். இவர்களில் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது அம்மாவின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஜான்வி கபூர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் "இன்றும் உங்களை நான் எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களை பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அனைத்து செயல்களையும் செய்து வருகிறேன். நான் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் எல்லாமே உங்களிடம் தொடங்கி, உங்களிடமே முடிவடைகிறது என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sridevi #Janvi kapoor
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story