×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"போட்ற வெடிய.." 'RRR' தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் தளபதி விஜய்.? குட் நியூஸ் விரைவில்.!

போட்ற வெடிய.. 'RRR' தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் தளபதி விஜய்.? குட் நியூஸ் விரைவில்.!

Advertisement

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தைத் தயாரித்தவர் டிவிவி தனய்யா. அந்தப் படத்தில் வந்த நாட்டுக் கூத்து பாடல் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
     அவர் விஜய்யின் 69-வது படத்தைத் தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் அந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததாகவும் அதனால் விஜய் நடிப்பது உறுதி என்றும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. மிகப் பிரம்மாண்டமான படமாக அப்படம் உருவாக உள்ளதாகவும் படத்தின் இயக்குனர் யார் என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் 69 படத்தின் வேலைகள் ஆரம்பமாகலாம். இதனிடையே, விஜய் தீவிர அரசியலில் இறங்க உள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அடுத்த இரண்டு வருடங்களில் அவர் நடிப்பதை விட்டும் விலகுவாரா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thalapathy vijay #Kollywood #tamil cinema #Thalapathy 69 #DVV Danayya
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story