×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய், அஜித் வரிசையில் தனுஷ்... டி50 திரைப்படத்தில் த்ரிஷா.? சர்ப்ரைஸ் அப்டேட்.!

விஜய், அஜித் வரிசையில் தனுஷ்... டி50 திரைப்படத்தில் த்ரிஷா.? சர்ப்ரைஸ் அப்டேட்.!

Advertisement

சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில்  அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தத் திரைப்படம் வருகின்ற ஆயுத பூஜைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீரியட் ஆகஷன் சினிமாவாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள்  தென்காசியை சுற்றி உள்ள காட்டுப்  பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது. இந்த  திரைப்படத்திற்காக தனுஷ் நீண்ட தாடி மற்றும் நீண்ட தலைமுடியும் வளர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிறகு  தனுஷ் அவரது ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்க இருக்கிறார்‌. இதற்கு முன்பு பவர் பாண்டி திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷின் ஐம்பதாவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த பிறகு டி 50 திரைப்படத்திற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த திரைப்படம் தொடர்பாக கதை விவாதத்திற்கு ஜவகர் மித்திரனையும்  தனுஷ் அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த திரைப்படத்தில் தனுசுக்கு கதாநாயகியாக நடிக்க திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இதனை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கொடி திரைப்படத்திற்குப் பிறகு தனுசுடன் திரிஷா மீண்டும் இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dhanush #d50 #trisha #sunpictures #kollywoodnews
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story