பிக்பாஸ் புகழ் சாக்க்ஷி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவரா? பரபரப்பு ட்விட்!
Is shakshi agrwal already married
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. கடந்த இரண்டு சீசன்களை தொடந்து மூன்றாவது சீசனையும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே சண்டை, சர்ச்சை, காதல் என காரசாரமாக சென்றுகொண்டிருக்கிறது சீசன் 3 .
மொத்தம் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார் சாக்க்ஷி அகர்வால். ரசிகர்களின் ஒட்டுமொத்த வெறுப்பை சம்பாதித்துள்ள பிக்பாஸ் போட்டியாளர்களில் இவரும் ஒருவர். இவர் கவினை காதலிப்பதாக கூறி அரங்கேற்றும் நாடகங்கள் பிக்பாஸ் வீட்டில் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில் சாக்க்ஷி ஏற்கனவே திருமணம் ஆனவர் என சில தகவல்கள் தெரிவிப்பதாகவும், பிக்பாஸ் வீட்டிற்குள் நீங்கள் சென்றால் நிச்சயம் சாக்க்ஷியிடம் இதைப்பற்றி கேட்குமாறும் ரசிகர் ஒருவர் பிக்பாஸ் சீன்சன் ஒன்றின் போட்டியாளர் காஜலுக்கு ட்விட் செய்துள்ளார்.
ரசிகரின் ட்விட்க்கு அதிர்ச்சியுடன் இது உண்மையா என கேள்வி கேட்டதோடு, நிச்சம் பிக்பாஸ் வீட்டிற்குள் போனால் சாக்க்ஷியிடம் இதனை கேட்பேன் என கூறியுள்ளார் காஜல் பசுபதி.