டேய்.. பேட்டிய கட் பண்ணுடா.. கேள்விக்கு பதிலளிக்கமுடியாமல் பாதியில் வெளியேறிய இரண்டாம் குத்து இயக்குனர். வைரல் வீடியோ
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் நேர்காணல் ஒன்றில் இருந்து பாதியில் எழுந்துசென்ற வீடியோ காட்சி தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் நேர்காணல் ஒன்றில் இருந்து பாதியில் எழுந்துசென்ற வீடியோ காட்சி தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.
கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. அடல்ட் ஹாரர் சம்மந்தமான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இரண்டாம் குத்து படத்தை சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி அவரே நடித்தும் உள்ளார். படத்தின் டீசர் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றதை அடுத்து பலதரப்பில் இருந்தும் படத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது. மேலும் படத்தின் டீசர் அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் நீக்கப்பட்டது.
இந்நிலையில் படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் தனியார் ஊடகம் (cinemaexpress.com) ஒன்றுக்கு பேட்டியளித்தபோது நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கமுடியாமல், மாறாக கோவப்பட்டு பேட்டியில் இருந்து பாதியில் எழுந்து சென்றுள்ளார். இந்த இந்த வீடியோவை பேட்டி எடுத்த செய்தியாளர் ஆஷா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.