தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கட்டம் கட்டப்படும் இரண்டாம் குத்து திரைப்படம்! படத்துக்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை!

ஆபாச காட்சிகள் நிறைந்த இரண்டாம் குத்து திரைப்படத்திற்கு தடை விதிக்க தமிழக அரசு ஆவணம் செய்யும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

Irandam Kuthu movie may ban soon Advertisement

ஆபாச காட்சிகள் நிறைந்த இரண்டாம் குத்து திரைப்படத்திற்கு தடை விதிக்க தமிழக அரசு ஆவணம் செய்யும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படம் வெற்றிபெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் என கூறி, இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்கி, அதில் நடித்தும் உள்ளார் படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

Irantaam kuththu

இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீஸர் ஆகியவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை பெற்றது. பிட்டு படங்களையே மிஞ்சும் அளவிற்கு இந்த படத்தின் ஆபாச காட்சிகள் கொட்டி கிடப்பதால், இந்த படத்தை தடைசெய்யவேண்டும் என பலதரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.

மேலும் பொதுமக்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த பட விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கூறுகையில், "இரண்டாம் குத்து படத்துக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாடு, கலச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் எந்தக் காட்சிகளாக இருந்தாலும், படங்களாக இருந்தாலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இப்போதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழர்களின் பண்பாடு, கலச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் வகையில் எந்த படம் வந்தாலும், யாருடைய படமாக இருந்தாலும் அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு சென்சார் போர்ட் மூலமாக அந்த படத்தை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்" என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Irantaam kuththu #Ban irantam kuththu movie #Irutu araiyil murattu kuththu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story