×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நண்பேன்டா.. உலக நாயகனுக்காக களமிறங்கும் சூப்பர் ஸ்டார்.! இன்று மாலை மிஸ் பண்ணிடாதீங்க!!

நண்பேன்டா.. உலக நாயகனுக்காக களமிறங்கும் சூப்பர் ஸ்டார்.! இன்று மாலை மிஸ் பண்ணிடாதீங்க!!

Advertisement

கடந்த 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் இந்தியன். அதன் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 உருவாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ராகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், அதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் படம் இரு பாகங்களாக வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழில் நடிகர் ரஜினி வெளியிடுகிறார். மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் இயக்குநர் ராஜமெளலி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான், கன்னடத்தில் கிச்சா சுதீப் ஆகியோர் இந்தியன் 2 அறிமுக வீடியோவை வெளியிடவுள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#indian 2 #rajini #kamal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story