×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தேவர்மகன் படத்திற்கு முதலில் வைத்த பெயர் என்ன தெரியுமா? பின்னர் தேவர்மகன் என மாறியதற்கு காரணம் யார் தெரியுமா?

Ilayaraja asked kamal to change nammavar movie name to devarmakan

Advertisement

தமிழ் சினிமாவில் நடிகர் கமல் என்றாலே பல சர்ச்சைகள் என்றுதான் அர்த்தம். அவர் இயக்கும் படங்களாக இருந்தாலும் சரி அல்லது அவர் நடிக்கும் படங்களாக இருந்தாலும் சரி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவார். படம்தான் அப்படி என்றால் படத்தின் பெயர்களும் சர்ச்சையில் சிக்கும். அதற்கு உதாரணம்தான் விருமாண்டி திரைப்படம். 

முதலில் இதற்கு சண்டியர் என்ற பெயரைத்தான் வைத்தனர். பின்னர் பல சர்ச்சைகள் காரணமாக இதற்கு விருமாண்டி என்று பெயர் வைத்தனர். அந்த வகையில் கமல் நடிப்பில் வெளியான “தேவர் மகன்” படத்தின் தலைப்பிற்கு பெரும் சர்ச்சைகள் கிளப்பியது. அந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிட்டு பெயர் வைத்திருப்பதால் கமல் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது என்ற ஒரு சர்ச்சையும் உள்ளது.

நடிகர் கமலின் வெற்றிப்படங்களில் மிகவும் முக்கியமான ஓன்று தேவர் மகன். கமல், சிவாஜி, ரேவதி மற்றும் கவுதமி ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்பத்திற்கு முதலில் நம்மவர் என்றுதான் கமல் பெயர் வைத்திருந்தார்.


ஆனால், “நம்மவர்” என்ற தலைப்பு வேண்டாம் இந்த படத்திற்கு “தேவர் மகன்” என்று பெயர் வையுங்கள் என்று அந்த படத்தின் இசையமைப்பாளராக இருந்த இளையராஜா கூறியுள்ளார். அதன் பின்னர் தான் “தேவர் மகன்” என்ற பெயரை வைத்தார் கமல். இருப்பினும் இந்த படத்திற்காக கமல் யோசித்து வைத்த  “நம்மவர்” என்ற தலைப்பை வேறொரு படத்தில் வைத்திருந்தார் கமல்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Devar magan #Nammavar #kamalhasan #Ilayaraja
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story