ஜி.வி பிரகாஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்! உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள அசத்தல் காரியம்! வைரலாகும் புகைப்படம்!!
ஜி.வி பிரகாஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்! உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள அசத்தல் காரியம்! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ் மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இடி முழக்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கியுள்ளார். இதில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார்.
மேலும் சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சௌந்தரராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்கை மேன் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு என்ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
இந்நிலையில் இடிமுழக்கம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதனை நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜி.வி பிரகாஷின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளிவந்த இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.