×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது? வெளியான அசத்தல் தகவல்!

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது? வெளியான அசத்தல் தகவல்!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

மேலும், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லன் கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுனன் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vidamuyarchi #Ajith Kumar #Lyca Production #Mahizh Thirumeni #anirudh
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story