அடேங்கப்பா.. வேறலெவல்தான்! வேல்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! செம உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்!!
ப்பா.. வேற லெவல்தான்! வேல்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு! செம குஷியில் சிம்பு ரசிகர்கள்!! என்ன விஷயம் தெரியுமா??
தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டு விளங்குபவர் நடிகர் சிம்பு. சினிமாத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் பின்னர் 2002-ம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்து தொடர்ந்து ஏராளமான பிளாக்பஸ்டர், சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தார்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு பெற்று, வசூல் சாதனையும் படைத்தது. அதனைத் தொடர்ந்து சிம்பு தற்போது பத்து தல, கொரோனா குமார், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகர் சிம்புக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க போவதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள தகவல் தற்போது பரவி வருகிறது. இந்த டாக்டர் பட்டம் வரும் ஜனவரி 11-ந் தேதி வழங்கப்படவுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். இதற்கு முன்பு எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன். விக்ரம், விஜய் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிப் பெருமைப் படுத்தப்பட்டுள்ளது.