×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீரென மாயமான பிரபல நடிகை! படகில் தனியாக தவித்த 4 வயது மகன்! நடந்தது என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

Hollywood actress missed 4 year son in lake

Advertisement

ஹாலிவுட் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை நியா ரிவேரா. இவர் ஃப்ரான்கன்ஹூட், க்ளீ, மேட் ஃபேமிலீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலிபோர்னியா பகுதியில் உள்ள பிரு ஏரிக்கு படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது 4 வயது மகன் ஜோஸியுடன் படகு சவாரி செய்துள்ளார்.

இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு பிறகு அந்தப்படகில் 4 வயது குழந்தை மட்டுமே தூங்கியவாறு இருந்துள்ளது. இதனை மற்றொரு படகில் வந்த சிலர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் குழந்தையின் அருகே படகில் பெரியவர்களுக்கான லைஃப் ஜாக்கெட் ஒன்று இருந்துள்ளது. மேலும்  செல்ஃபோனும் கிடந்துள்ளது.

பின்னர் இதுகுறித்து அவர்கள் காவல்துறைக்கு தகவலளித்துள்ளனர். இந்த நிலையில் படகு சவாரியின் போது நடிகை நியா தவறி ஏரியின் உள்ளே விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் இரவு முழுவதும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். மேலும் விசாரணையில் தன் தாய் நியா தண்ணீரில் நீந்தியதாகவும், அவரால் மீண்டும் படகுக்கு வரமுடியவில்லை என்றும் ஜோஸி கூறியுள்ளார். மேலும் நியாவின் கார் பிரு ஏரியின் கார் நிறுத்தத்தில் இருந்துள்ளது.

 இந்நிலையில் போலீசார்கள் இருநாட்களாக தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் நியா  கிடைக்காத நிலையில் அவர் காணாமல் போய்விட்டார் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் பிரு ஏரியில் படகு சவாரி செய்ய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Hollywood actress #Boat ride
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story