×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீரென உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள்!

பிரபல ஹிந்தி சீரியல் நடிகை லீனா ஆச்சாரியா சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்தநிலையில் திடீரென உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பிரபல ஹிந்தி சீரியல் நடிகை லீனா ஆச்சாரியா, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருந்த தகவலறிந்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ஹிந்தியில் ஆப் கே ஆ ஜானே சே, மேரி ஹனிகரக் பிவி, கிளாஸ் ஆஃப் 2020 உள்ளிட்ட சில டிவி தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை லீனா ஆச்சாரியா. இவர் கடந்த ஒரு ஆண்டாக சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டு, அதற்காக தீவிர  சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில் 30 வயது நிறைந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்த நிலையில் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#leena acharya #dead #kidney
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story