×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முன்னாள் காதலன் டார்ச்சர்.! தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சீரியல் நடிகை.! சிக்கிய கடிதத்தால் பரபரப்பு!!

முன்னாள் காதலன் டார்ச்சர்.! தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சீரியல் நடிகை.! சிக்கிய கடிதத்தால் பரபரப்பு!!

Advertisement

ஹிந்தி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் வைஷாலி தக்கர். அதனை தொடர்ந்து அவர் சூப்பர் சிஸ்டர்,விஸ் ய அம்ரித், மன்மோகினி உள்ளிட்ட பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் அவர்  இறுதியாக ரக்ஷா பந்தன் என்ற நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார். 

நடிகை வைஷாலிக்கு கென்யா நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவரான அபிநந்தன் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஆனால் சில காரணங்களால் அந்த திருமணம் நிச்சயத்தோடு நின்றது. இந்நிலையில் இந்தூரில் தனது பெற்றோருடன் வசித்து வரும் வைசாலி நேற்று நீண்ட நேரமாக படுக்கையறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அங்கு வைசாலி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வைஷாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அங்கு வைஷாலி உயிரிழப்பிற்கு முன் எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளது. அதில் அவர் தனது முன்னாள் காதலன் மிகவும் துன்புறுத்தியதால்தான் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியுள்ளார். அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வைஷாலியின் முன்னாள் காதலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dead #Vaishali takkar #suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story