×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி.. பிரபல பிக்பாஸ் வெற்றியாளர் திடீர் மரணம்! கடும் சோகத்தில் கண்ணீர் விடும் திரையுலகம்,ரசிகர்கள்!!

பிரபல நடிகரும், ஹிந்தி பிக்பாஸ் சீசன் 13ன் வெற்றியாளருமான 
சித்தார்த் சுக்லா மார

Advertisement

பிரபல நடிகரும், ஹிந்தி பிக்பாஸ் சீசன் 13ன் வெற்றியாளருமான 
சித்தார்த் சுக்லா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஹிந்தியில் ஒளிபரப்பாகி மாபெரும் வரவேற்பை பெற்ற பலிகா வாது,  தில் சே தில் தக்  உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் நடிகர் சித்தார்த் சுக்லா.

இதில் பலிகா வாது என்ற தொடர் தமிழில் மண்வாசனை என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பானது. அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு உலகின் சிறந்த மாடல் என்ற பட்டத்தை வென்ற அவர் ஹிந்தியில் பிக்பாஸ் 13வது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இவர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆனார். நடிகர் சித்தார்த் சுக்லா திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக கூறியுள்ளனர். சித்தார்த் சுக்லாவின் இந்த திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Siddharth sukeela #bigboss #dead
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story