×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலுக்கு எதிர்ப்பு!! கூலிப்படையை ஏவி அண்ணனை கொலை செய்த பிரபல இளம்நடிகை கைது ! வெளியான பகீர் பின்னணி!!

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே சில தினங்களுக்கு முன்பு தலையின்றி, கால் த

Advertisement

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே சில தினங்களுக்கு முன்பு தலையின்றி, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவரது உடல் கிடந்துள்ளது அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் அந்த நபர் மிஸ் கர்நாடக அழகியான, நடிகை ஷான்யா காடவேயின் அண்ணன் எனவும், மர்ம நபர்கள் அவரை கொலை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

பின்னர் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரபடுத்திய நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது மும்பையில் வசித்து வருவர் ஹிந்தி நடிகை ஷான்யா. அவர் தன் மேனேஜர் நீயாஜ் அகமது என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இது அவரது அண்ணன் ராகேஷ்க்கு பிடிக்கவில்லை. அதனால் அவரை கண்டித்துள்ளார். இந்த நிலையில் நடிகை ஷான்யா தனக்கு இடைஞ்சலாக இருக்கும் அண்ணன் ராகேஷை கொல்ல முடிவு செய்து இதுகுறித்து தனது காதலரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவரும் சேர்ந்து கூலிப்படையிடம் பணம் கொடுத்து அவரை கொலை செய்ய கூறியுள்ளனர். அவர்கள் ராகேஷை கடத்திச் சென்று காரிலேயே வைத்து கொலை செய்து, கை-கால்கள், தலையை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து போலீசார் கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த 6 பேர் மற்றும் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஹிந்தி நடிகை ஷான்யா அவரது காதலர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#arrest #Shanya #Murder
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story