×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த பட வழக்கு! தடைவிதித்து உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த பட வழக்கு! தடைவிதித்து உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

Advertisement

தமிழ் சினிமாவில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் அவருக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் மற்றும் குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். அண்ணாத்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் அண்மையில் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அண்ணாத்த படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி சன் பிக்சர்ஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் எனவும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அண்ணாத்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#highcourt #Annathe
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story