×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது! ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் இந்த படத்தை பார்ப்பதற்கு இவ்வளவு கட்டணமா? ஷாக்கான ரசிகர்கள்!

high Amount charged for ka pae ranasingam by ott

Advertisement

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் க/பெ ரணசிங்கம். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அவருடன் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசைமையத்துள்ளார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளிலும் உருவாகவிருக்கும் இப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தியேட்டர்கள் எதுவும் திறக்கப்படாத நிலையில் அக்டோபர் 2-ம் தேதி ஜிபிளஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக  படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஜீ பிளக்ஸ் தளத்தில் ஒரு படத்தை ஒரு முறை பார்ப்பதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில்  க.பெ.ரணசிங்கம் படத்தை ஜீ பிளக்ஸ் தளத்தில் ஒரு முறை பார்ப்பதற்கு 199 ரூபாயை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சினிமா தியேட்டர்களில் பார்ப்பதற்கு செலுத்தும் கட்டணத்தை விட அதிகம் என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay sethupathi #charge #OTT
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story