×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லிவிங்ஸ்டனின் மகள்களை பார்த்துள்ளீர்களா.. வைரலாகும் புகைப்படம்..!

லிவிங்ஸ்டனின் மகள்களை பார்த்துள்ளீர்களா.. வைரலாகும் புகைப்படம்..!

Advertisement

நடிப்பு மட்டுமின்றி பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் சில படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். கே.பாக்யராஜ் இயக்கிய 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதன் பிறகு பல படங்களில் நடித்த இவர் 1998ல் விஜயகாந்த் நடித்த பூந்தோட்ட காவல்காரன் படத்தில் வில்லனாக நடித்தார். ஆரம்ப காலத்தில் ரஞ்சன் என்ற பெயரில் பல படங்களில் வில்லனாக நடித்தார். ரஜினியின் வீரா படத்திலும் லிவிங்ஸ்டன் வில்லனாக நடித்துள்ளார். 

​​​​​​இதையடுத்து ‘சுந்தரபுருஷன்’ படத்தில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய லிவிங்ஸ்டன், அதன் பிறகு சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம், என் புருஷன் குழந்தை மாதிரி என பல படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். 

பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் தற்போது தனது மகள்களுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அவர் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பெரும்பாலும் அவரது இரண்டு மகள்கள் தான் காரணம்.

லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு அழகான மகள்கள் இருக்கிறார்களா என்று பல ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அவர் 1997 இல் ஒரு ஆசிரியரான ஜெஸ்ஸியை மணந்தார். அவர்களுக்கு ஜோவிதா மற்றும் ஜெம்மா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். 

இவரது மூத்த மகள் ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பான 'பூவே உனக்காக' சீரியல் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். தற்போது அதே சேனலில் ஒளிபரப்பாகும் 'அருவி' சீரியலில் நடித்து வருகிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema #livingston #daughter
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story