ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் விஜய் டிவியின் 3 பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?
Happy birthday to Vijay stars

பல்வேறு புதிய புதிய கலைஞர்களை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகப்பெரும் கடமையை செய்து வருகிறது விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான 3 நபர்களின் பிறந்தநாள் இன்று பிப்ரவரி 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது பிறந்தநாள் இன்றுதான்.
அடுத்தது, ஆரம்பகாலத்தில் ஒருசில படங்களில் நடித்து இன்று விஜய் டிவியில் நிரந்தரமாக இருந்துவரும் தாடி பாலாஜி. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வரும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இவருக்கும் இன்று தான் பிறந்தநாள்.
மூன்றாவது, முதலில் சன் டி.வி.யில் தொகுப்பாளராக இருந்து பின்னர் விஜய் டிவிக்கு வந்த ரியோ. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். மேலும் தற்போது சினிமாவில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவருக்கும் இன்று தான் பிறந்தநாளாம்.