×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிம்பு படத்தை கைப்பற்றிய விஷ்ணு விஷால்.. அடடே இயக்குனர் இவரா?

சிம்பு படத்தை கைப்பற்றிய விஷ்ணு விஷால்.. அடடே இயக்குனர் இவரா?

Advertisement

தமிழ் சினிமாவில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்தது மூலம் ரசிகர்களுடைய மிகவும் பிரபலமானார்.

அதன் பின்னர் இவர் நடித்த ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான லால் சலாம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனிடையே இயக்குனர் அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் ஒரு திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த திரைப்படம் சிம்பு நடிக்கவிருந்த கொரோனா குமார் திரைப்படத்தின் கதை என கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vishu Vishal #Gokul #Corona kumar #cinema news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story