×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அவர்தான் வேணும்.. அலைபாயுதே பாணியில் காதல் திருமணம்! கணவர் செய்த காரியத்தால் இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள தோட்டக்காடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. அரசு

Advertisement

சோழவரம் அருகே உள்ள தோட்டக்காடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்த அவருக்கு தன்னுடன் கல்லூரியில் படித்து வந்த பிரமோத் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருவரும் ஊத்துக்கோட்டை அடுத்துள்ள காட்டு செல்லியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 

 அதனை தொடர்ந்து சென்னையில் இருவரும் பதிவு திருமணமும் செய்து கொண்டுள்ளனர். பின்னர் சித்ரா மற்றும் பிரமோத் இருவரும் அவரவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து நாளடைவில் இதுகுறித்து இரு வீட்டாருக்கும் தெரிய வந்து பிரச்சினை ஏற்பட்ட நிலையில் இருவரும் தனியாக வீடு எடுத்து தனிக் குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த இருவருக்கும் இடையே நாளடைவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது மனைவியை விவாகரத்து செய்ய பிரமோத் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆனால் சித்ரா தான் கணவருடன்தான் வாழ வேண்டும் என தன் உறவினர்களுடன் மாமியார் வீட்டிற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Love #marriage
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story