×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விமானத்தில் அழுதுகொண்டே இருந்த குட்டி தேவதை! ஆறுதல்படுத்த ஊழியர் செய்த நெகிழ்ச்சி காரியம்! வைரல் வீடியோ!!

விமானத்தில் அழுதுகொண்டே இருந்த குட்டி தேவதை! ஆறுதல்படுத்த ஊழியர் செய்த நெகிழ்ச்சி காரியம்! வைரல் வீடியோ!!

Advertisement

விமானத்தில் அழுதுகொண்டிருந்த குழந்தையை ஊழியர் ஒருவர் தூக்கி வைத்துக்கொண்டு அங்குமிங்கும் நடந்து சென்று சமாதானம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகின்றது.

ஏர் இந்தியா விமானத்தில் குழந்தை ஒன்று அழுதுகொண்டே இருந்துள்ளது. அப்பொழுது நீல் மால்கம் என்ற விமானத்தில் பணிபுரியும் ஊழியர் அந்த குழந்தையை தனது தோளில் தூக்கி போட்டுகொண்டு விமானத்திற்குள் அங்குமிங்கும் மெதுவாக நடந்து கொண்டே இருந்துள்ளார். மேலும் குழந்தையின் முதுகில் மெதுவாக தட்டி கொடுத்து ஆறுதல் படுத்தியுள்ளார்.

குழந்தையும் யாரென்று தெரியாத அந்த நபரின் தோளில் மிகவும் அமைதியாக படுத்துகொண்டு இருந்துள்ளது. அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த குழந்தையின் தந்தை, ஏர் இந்தியா ஊழியரின் இனிமையான செயலை நான் மிகவும் பாராட்டுகிறேன். எனது மகள் விமான ஊழியரின் தோள்களில் வசதியாக படுத்திருப்பதை கண்டு நான் ஆச்சர்யமடைந்தேன். அவருக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Flight attender #Crying baby
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story